திமுக ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட வாரியாக பயணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அக்குழு, நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு கட்சிக்குள் சீரமைப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது. திமுகவில் உள்ள 22 அணிகளிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி, அமைப்பு ரீதியான மாவட்டங்களை அதிகரிக்கவும், செயல்படாத நிர்வாகிகளை மாற்றவும் அக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.