குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திரௌபதி முர்முவுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான அவரது X வலைதள பதிவில், குடியரசுத்தலைவராக முர்மு தேர்வானதால் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய நாடாக இந்தியா மிளிர்வதாகவும், சவால்களை சந்திக்கும் பெண்களுக்கு உதாரணமாக, ஊக்கமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.