முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. “ஆகஸ்ட் 5-ம் தேதி என்பது மிக நீண்ட காலமாக இருக்கும். எனவே இன்றைய தினம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை இன்னும் சில கேள்விக்கு பதிலளிக்காததால் உச்சநீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் \என்று அறிவித்தார்.