பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லவில்லை என்றால் இனி எப்போதுமே அதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்காதென இந்திய வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் (40) கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இதுவே தங்களுக்கான கடைசி வாய்ப்பு என நினைத்து விளையாட வேண்டுமென கூறிய அவர், இது தனது 4வது ஒலிம்பிக் போட்டி என்றார். அத்துடன், இந்த முறை பதக்கம் வெல்வேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.