இந்தியாவில் 19.5 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக SOFI அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் 79 கோடி (55.6%) மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை என்றும் ஆய்வறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் 27.4% குழந்தைகள் இரண்டரை கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறப்பதாகவும், இவற்றை சீர் செய்ய வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது