தமிழ்நாட்டுக்கு எதிரான போக்கை மோடி அரசு மாற்றிக்கொள்ளவில்லை என்றால், மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார். இந்திய வரைபடத்தில் தமிழகம். தெலுங்கானா என அனைத்து மாநிலங்களும் இருக்க வேண்டும் என்ற அவர், குறிப்பிட்ட மாநிலங்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது இந்தியாவாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.