தமிழகம், ராஜஸ்தான், திரிபுரா, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மேலிட பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். தமிழக மேலிட பொறுப்பாளராக அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், அரவிந்த் மேனன், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.