பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனாவால் இரண்டு நுரையீரல்களிலும் நிம்மோனியா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் வியாழக்கிழமையன்று நியூயார்க் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நடிகைகளை பலாத்காரம் செய்த வழக்கில் 2020 ஆம் வருடம் கைது செய்யப்பட்டார். ஹாலிவுட்டில் மீ டூ இயக்கத்தைத் தொடங்க காரணமாக இருந்தவர். பல நடிகைகள் அவர் மீது பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினர்.