இந்தியா மீதான தாக்குதல்களை மறைமுகமாக இன்றும் பாகிஸ்தான் தொடர்கிறது. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படுவர் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் உரையாற்றிய மோடி, “கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீவிரவாதத்தை நம்முடைய வீரர்கள் முழு வலிமையோடு எதிர்ப்பார்கள். லடாக், காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான பிரச்சனைகளை இந்தியா தோற்கடிக்கும் என கூறியுள்ளார்.