பைக் திருடுவதற்காக போலீஸ் எஸ்.ஐ.,யின் வீட்டிற்குள் புகுந்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் கொல்லம் சிதரா பகுதியில் உள்ள எஸ்.ஐ., வீட்டில், கிளிமானூர் தட்டத்துமலையை சேர்ந்த சுஜின் என்பவர் புகுந்து பைக்கை திருடியுள்ளார். அவரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் பிடித்தனர். கொல்லத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 10 பேருக்கு எதிராக காபாசட்டப்படி கொல்லம் நகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.