ஜனாதிபதி மாளிகையில் உள்ள பிரபல அறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தர்பார் ஹால் மற்றும் அசோக் ஹால் ஆகியவை முறையே கணதந்திர மண்டபம் மற்றும் அசோக் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் தர்பார் ஹாலில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.