மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.