வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுக்கு தனித்தனி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த டிராய் உத்தேசித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் நுகர்வோர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது இவை அன்லிமிடெட் பிளான் என தொகுக்கப்பட்ட திட்டமாக வழங்கப்படுகிறது. இதனால் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே பயன்படுத்துவோர் டேட்டா பயன்படுத்தாவிட்டாலும் அதற்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளதாக புகார் கூறுகின்றனர்.