கிரேட் பி நிலையில் 94 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பிக்க ஜூலை 27 இன்று கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் https://www.rbi.org.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 21 முதல் 30 வரையிலும் கல்வித் தகுதி பொருளாதாரத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, புள்ளியியல், முதுநிலை பட்டமும் கோரப்பட்டுள்ளது. முதலில் எழுத்து தேர்வு நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.