மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், மாற்றான் தாய் போக்குடன் தமிழகத்தை பாஜக வஞ்சித்து விட்டதாகவும் வெள்ள பேரிடர் நிதி மற்றும் மெட்ரோ ரயில் திட்ட நிதியை வழங்கவில்லை என்றும், தமிழக முதல்வரின் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.