இருசக்கர வாகனம் ஓட்டும் போது பின் சீட்டில் அமர்ந்திருப்பவரிடம் பேசினால் அபராதம் விதிக்கும் திட்டத்தை அமல்படுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கவனச்சிதறலை குறைக்கும் வகையில் இந்த விதியை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.