பாகுபலி படத்தில் மனோஹரி பாடலுக்கு நடனமாடிய ஹிந்தி நடிகை நோரா ஃபதேஹி, ஆரம்ப காலத்தில் சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு ஒரு முட்டை, ரொட்டியை மட்டுமே உண்டதாகவும், சம்பளத்தின் பெரும்பகுதியை வாய்ப்பு வாங்கித் தரும் தரகர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். தற்போது ஒரு பாடலுக்கு நடனமாட ₹1 கோடி முதல் ₹2 கோடி சம்பளம் வாங்குவதாக கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.