நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தாவை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஜனநாயகத்தின் அங்கம் என்பதை புரிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அவர், இதுதான் மாநில முதல்வரை நடத்தும் விதமா? என்றும் கேள்வி எழுப்பினார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “இதுதான் #கூட்டுறவு கூட்டாட்சியா?ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டுறவு கூட்டாட்சிக்கு அனைத்து குரல்களுக்கும் உரையாடல் மற்றும் மரியாதை தேவை” தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடம் பேசவிட்டு, தனக்கு 5 நிமிடமே தரப்பட்டதாக மம்தா குற்றஞ்சாட்டியதை மேற்கோள் காட்டி அவர் கண்டித்துள்ளார்.