ஜம்மு அனந்த்நாக் மாவட்டம் அருகே சிம்தான் கோகர்நாக் சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.