டெல்லியில் பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 மாணவிகள் பலியான சோகம் நடந்துள்ளது. மேலும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லி போலீஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.