நிர்பயா நிதியை முழுமையாக பெற்று பயன்படுத்த உயர்மட்ட குழு அமைக்க கோரி 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து நடந்த விசாரணையில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், நிர்பயா நிதி மூலம் தமிழகத்தில் காவல் நிலையங்களில் பெண்கள் ஆதரவு பிரிவை அமைத்து வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.