ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தனித்துவமான எண்ணை உருவாக்குவதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். தனிநபருக்கு ஆதார் எண் இருப்பது போல நிலத்திற்கும் unique land parcel identification number என்ற எண்ணை உருவாக்குவதாக கூறியுள்ளார். இதன் மூலமாக அந்த இடத்தின் உரிமையாளர் யார்? யாரிடமிருந்து வாங்கப்பட்டது? அதன் மதிப்பு என்ன? போன்ற அனைத்து விவரங்களும் அந்த எண்ணில் பதிவு செய்யப்படும்.