நிலவில் குடியிருப்புகளை உருவாக்க முடியுமா என்று உலக நாடுகள் ஆராய்ச்சி செய்து வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்து விட்டோம் என்றும் அங்கேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா என்ற ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நிலவில் மெதுவாக துருவப் பகுதியில் இறங்க முடியும் என்பதை இந்தியா சொல்லிவிட்டதாக தெரிவித்துள்ளார்.