பாரிஸ் ஒலிம்பிக்ஸின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் முன்னேறியுள்ளார். மகளிருக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடிய அவர் 631.5 புள்ளிகளைப் பெற்று 5ஆம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். 43 வீராங்கனைகள் பங்குகொண்ட இந்த ஆட்டத்தில் முதல் இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.