பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள மனு பாக்கர், பகவத் கீதை படித்து, அதன்படி செய்ய வேண்டியதை செய்ய முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். பதக்கம் வென்ற பின் பேட்டியளித்த அவர், ” எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். நாம் விதியை எதிர்த்துப் போராட முடியாது. என்னிடம் உள்ள முழு ஆற்றலையும் செலுத்தி போராடினேன்” என்று கூறியுள்ளார்.