சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாக மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் குறைந்தபட்ச விலை 42 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு விலையை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.