தெலுங்கானா உள்ளிட்டா ஒன்பது மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்களை குடியரசு தலைவர் நியமித்துள்ளார். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்திற்கான புதிய ஆளுநர் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா அல்லது ஆர்.என். ரவி மீண்டும் தொடர்வாரா என்ற கேள்வி எழுகிறது.