தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவை ஒரே நேரத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை சகட்டுமேனியாக உயர்த்தின. இதை சகித்துக்கொள்ள முடியாத மக்கள் இப்போது மிகவும் மலிவு விலையில் சிறந்த நன்மைகளை வழங்கும் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்தின் பக்கம் தாவ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 2 வாரங்களில் BSNL நிறுவனம் அதன் நெட்வொர்க்கின் கீழ் சுமார் 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்துள்ளது.