தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. முதல் சுற்றில் 30,264 மாணவர்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 26,654 மாணவர்கள், 7.5% இட ஒதுக்கீட்டில் 1,343 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 2,267 மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 433 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,79,938 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவுள்ளன.