ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 எம்பிக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து மாணவர்கள் இறந்த நிலையில், இதற்கு காரணமான 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மரண விவகாரம் தொடர்பாக உடனே விவாதிக்க எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.