ஆளும் பாஜக நடுத்தர மக்களின் முதுகில் குத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றி வரும் ராகுல் காந்தி, வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை விற்கும்போது அதிக வரி விதிப்பது நடுத்தர மக்களின் முதுகில் குத்துவது போன்றது. நீண்ட கால முதலீட்டு லாபங்களுக்கான வரியை உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களின் நெஞ்சில் குத்தும் செயல்” என்று கூறியுள்ளார்.