பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் வரி தீவிரவாதம் நடைபெறுவதாக எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், சிறு, குறு தொழில் செய்வோருக்கு நள்ளிரவில் ஜிஎஸ்டி, ED அலுவலகத்தில் இருந்து ஃபோன் வருவதாக குறை கூறினார். 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் விவசாயம் மற்றும் கல்விக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என விமர்சித்த அவர், கடந்த 10 ஆண்டில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் சாடியுள்ளார்.