உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாய் போட்டு படுத்துக்கொண்டு, மாணவர்களை விசிறியால் வீசவிட்டு, தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுப்பதாக, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உறுதியளித்துள்ளது.