தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பந்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படித்தான் தனது மகள் ரஹா கபூருக்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளார். தான் 17 வயதிலிருந்தே புகைப் பிடித்து வந்ததாகவும், தனது மகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, புகைப்பதை நிறுத்தியதாக கூறியுள்ளார். மேலும், மகளுக்காக, ஆரோக்கியமான தந்தையாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.