ரூ.10 நாணயங்கள் இன்னும் நம் நாட்டில் செல்லுபடியாக தான் செய்கிறது. கடந்த காலங்களில் யாரோ இந்த நாணயம் செல்லாது என்ற தவறான செய்திகளை பரப்பியுள்ளனர். படித்த சிலர் கூட ரூ.10 நாணயத்தை வாங்குவதில் இருந்து ஒரு படி பின்வாங்குகிறார்கள். சமீபகாலமாக ரூ.10 நோட்டுகள் சந்தையில் அதிகம் புழக்கத்தில் இல்லை. இதனால் அந்த ரூ.10 நாணயங்கள் செல்லுபடியாகும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.