கோவை மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் வீடு இடிந்து உயிரிழந்த 3 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி திப்பம்பட்டியில் வீட்டின் சுவர் இடிந்து ஹரிஹரசுதன் (21) என்பவரும் சோலையாறு அணை அருகே வீட்டின் மீது மண் சரிந்து ராஜேஸ்வரி (57), தனப்பிரியா (15) உயிரிழந்தனர். இதையடுத்து, இவர்களின் கும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.