2023ஆம் ஆண்டில் மட்டும் நாய்க்கடியால் 286 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த ஒரு வருடத்தில் மொத்தம் 30.5 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் மக்களவையில் எழுத்து மூலம் தெரிவித்தார். அதே ஆண்டில் 46,54,98 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மாநில அரசுகளும் ரேபிஸ் தடுப்பூசிக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன என்றார்.