நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை கடந்த 16ஆம் தேதி கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று இரவு நடந்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாபின் வழங்கப்பட்டுள்ளது.