ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வணிக வரி அலுவலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கட்டணங்களுக்கு கேளிக்கை வரி விதிக்க முடியாது” என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.