மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது?. தயவு செய்து மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்துப் பார்க்க வேண்டும். குஜராத் மாநிலத்திற்கு புயல் எச்சரிக்கை கொடுத்தோம், அங்கு உயிரிழப்பு ஏற்படவில்லை என்று காட்டமாக கூறியுள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 176 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.