பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒருமுறை அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார் எனவும், அதன்படி தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்ததும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிய வந்துள்ளது.