சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கட்டிடத்தில் அமமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் இதனை தொடர்ந்து கட்டிடத்தை காலி செய்யும் படி அதன் உரிமையாளர் நெருக்கடி கொடுப்பதாகவும் இதனால் புதிய இடத்தை டிடிவி தினகரன் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடையாருக்கு அமமுக அலுவலகத்தை மாற்ற டிடிவி தினகரன் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.