ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருட்களை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்டவை சரியான எடைகளில் பாக்கெட்டுகளில் வழங்கப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் தொகுதிக்கு ஒரு கடையில் இந்த திட்டத்தை தொடங்கவும் மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விரிவு படுத்துவதற்கும் அரசு முடிவு செய்துள்ளது. எடை குறைவாக பொருட்கள் வழங்குவதாக புகார் எழுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.