தனக்கு எதிராக அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், தனக்கு எதிராக சோதனை நடத்த வரும் அமலாக்கத்துறையை எதிர்பார்த்து டீ, பிஸ்கட்டுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். முன்னதாக, மக்களவையில் திங்கள்கிழமை பேசிய ராகுல், நாட்டையே 6 பேர் சக்ரவியூகமாக சுற்றிவளைத்து இருப்பதாகவும், அதை இந்தியா கூட்டணி உடைத்தெறியும் என குறிப்பிட்டிருந்தார்