சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருச்சிக்கு இன்று இரண்டு சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் நாகர்கோவிலுக்கு நாளை காலை 11 மணிக்கு செல்லும். தாம்பரத்திலிருந்து இன்று இரவு 11 மணிக்கு திருச்சிக்கும், திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு நாளை இரவு 10.30 மணிக்கு முன் பதிவு இல்லா ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.