சென்னை விமான நிலையப் பகுதியில் 60 நாட்களுக்கு கிளைடர், ட்ரோன், ஆர் பலூன்கள் பறக்க தடை விதித்த பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதில், 1973 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 144 பிரிவின் கீழ் சென்னை விமான நிலைய வான் பகுதியில் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 29 வரை லேசர் பீம் லைட் அடிப்பது மற்றும் இலகுரக சாதனங்களை பரப்ப விட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது