தமிழ்நாட்டில் 2026இல் பாஜக கூட்டணியை சேர்ந்தவர் முதல்வராக இருப்பார் என்று அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக பணியாற்றாமல், குடும்பத்துக்காக செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் ஸ்டாலின், பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்பவர்களுக்காக அதனை ரத்து செய்வாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.