தருமபுரம் ஆதீனத்திடமிருந்து பணம் பறித்த வழக்கில் அவரது முன்னாள் நேரடி உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது முன் ஜாமின் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வாரணாசியில் போலீசார் அவரை கைது செய்தனர்.
தருமபுரம் மடாதிபதி தொடர்பான ஆபாச வீடியோக்கள் இருக்கிறது என்றும், அதனை வெளியில் விடாமல் இருப்பதற்கு பணம் தர வேண்டும் என்று விரட்டிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.