புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் கழிப்பறைக்கு சென்ற போது விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், வீடுகளை விட்டு உடனடியாக வெளியே செல்லும்படி மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து விஷவாயு கசிந்து செந்தாமரை (வயது 72), அவரது மகள் காமாட்சி (45), செல்வராணி (15) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வீடுகளின் கழிவறைகள் வழியாக விஷவாயு கசிந்ததால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விஷவாயு கசிந்த கழிவு நீர் வடிகாலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஊழியர்கள்.