கர்நாடகாவை சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவரது கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். தர்ஷனுக்கு நெருக்கமான நடிகை பவித்ரா கவுடா குறித்து சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட ரேணுகா மர்மமான முறையில் உயிரிழந்தார்.
முதலில் இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் தர்ஷனுடன் சேர்த்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.